Breaking News

தமிழ் புறக்கணிப்பு – விசாரணைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் மனோ !

 

கொழும்பில் உணவகம் ஒன்றில் தமிழ் மொழி பேசக் கூடாதென செய்யப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறியோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் .

தனது ட்வீட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் ஒரு பதிவை இட்டுள்ளார்.