Breaking News

” தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்கவே மாட்டேன் ” – மஹிந்த ராஜபக்ச சற்றுமுன் திட்டவட்ட அறிவிப்பு !

 

” ஈஸ்ரர் தின தாக்குதல் நடந்து இன்றுடன் 6 மாதங்களாகி விட்டன.தேசிய பாதுகாப்பு குறித்து இந்த அரசுக்கு ஒரு தெளிவான கொள்கையில்லை .நாம் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்திட்டங்களை வகுப்போம் .உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்தமைக்கு இந்த அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.எல்லா தகவல்களும் இருந்தும் முறையான புலனாய்வுக் கட்டமைப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத காரணத்தினால் அந்த தாக்குதலை நடத்தவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது அரசு.நாங்கள் நாட்டின் பொறுப்பை ஏற்றால் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு ,அமைச்சரவை இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.ஏப்ரல் 5 ஆம் திகதி ஒரு அறிவிப்பு வந்தது.தாக்குதல்தாரிகளின் பெயர்கள் ,தாக்கப்படும் இடங்கள் ,தாக்கப்படும் நேரம் என்பன குறித்து அதில் சொல்லப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கூட இது குறித்து எச்சரித்திருந்தனர் .ஆனால் அரசு எதனையும் கண்டுகொள்ளவில்லை.மதவழிபாட்டுத் தலங்களுக்கு கூட செல்லமுடியாமல் போனது.இதனால் தான் நாங்கள் கோட்டாபயவை ஜனாதிபதியாக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த கோருகிறோம்.

தேர்தலுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளதாம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தநிபந்தனையையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.எமக்கு நாடும் நாட்டின் இறையாண்மையும் முக்கியம்.எந்த நிபந்தனையும் இதுவரை எம்மிடம் முன்வைக்கப்படவில்லை .அப்படி முன்வைக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை.ஆனால் நாட்டை பேரம்பேசும் எந்தக் கோரிக்கையையும் நாங்கள் ஏற்க தயாரில்லை.அதனை இப்போதே சொல்லிவிடுகிறேன்.”

– எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் பெலியத்தையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது திட்டவட்டமாக அறிவிப்பு