இலங்கை

” தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய உறுதிமொழி கிடைத்தால் போட்டியிலிருந்து விலகுவேன் ”- சிவாஜிலிங்கம் தெரிவிப்பு !

 

-யாழ்.செய்தியாளர்-

ஜனாதிபதி தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புக்களை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ள தமிழர்களின் கோரிக்கையை தென்னிலங்கயைில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர் தாம் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் என ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் உறுதிமொழி தருவார்களாயின் தாம் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் அவர் இன்று நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் ஒருமித்த கோரிக்கையை வரைபு செய்து தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தரப்புக்களிடம் கோரிக்கையாக முன்வைப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராவது, தாம் ஆட்சிக்கு வந்தால் அதைநிறைவேற்றுவோம் என ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் உறுதிமொழியைத் தருவார்களாயின் நான் ஜனாதிபதித்தேர்தலில் இருந்து உடனடியாகவே விலகுவேன் அதனை நான் பகிரங்கமாகவே அறிவிப்பேன்.- என்றார் சிவாஜிலிங்கம்