இலங்கை

தமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் !

 

– வன்னி செய்தியாளர் –

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

தமிழகத்தில் இருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதாகட்சி நிர்வாகிகள் யாழ்ப்பாணம் சங்கிலி மன்னனின் 400 ஆவது ஆண்டு விழாக்குழு விடுத்த அழைப்பின் பெயரில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.

பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண் உபாத்யாய ,தீட்சாக்கௌசிக்,தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்,மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழுபேர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். நேற்று (26) மாலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.