உலகம்

தமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு

 

மதுரையில் வாக்குப்பதிவு தொடர்வதால் மொத்த வாக்கு சதவீதம் 70 முதல் 72 சதவீதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறினார் .

தமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குகள் பதிவாகி உள்ளன. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு தெரிவிக்கப்படும்.

18 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் 71.62% வாக்குபதிவாகி உள்ளது. தமிழகத்தில் தேர்தலின் போது எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை.

மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 78% , சிதம்பரம் 76.03%, கள்ளக்குறிச்சி 75.18% வாக்குகள் பதிவாகி உள்ளன.

குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை.

மதுரையில் வாக்குப்பதிவு தொடர்வதால் மொத்த வாக்கு சதவீதம் 70 முதல் 72 சதவீதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.