உலகம்

தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவுபெற்றது.

வ காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்துச் சென்றனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் சித்திரைத் திருவிழா காரணமாக, இரவு 8 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

39 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும், புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.