Breaking News

தபால் மூல வாக்களிப்பிற்காக விசேட தினம் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதியை விஷேட வாக்களிப்பு தினமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.