இலங்கை

தபால் மூலம் வந்த மர்ஜுவானா போதைப்பொருள் சிக்கியது – நீர்கொழும்பில் மூவர் கைது

 

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு தபால் மூலமாக கடத்தப்பட்ட எட்டுலட்ச ரூபா பெறுமதியான 230g மர்ஜுவானா (உருகுவே கஞ்சா) போதைப்பொருள் நீர்கொழும்பு கட்டான தபால் நிலையத்தில் இருந்து பெற்றுச்செல்கையில் கட்டான பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம்(27) கட்டான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்குகமையவே போதைப்பொருள் இருந்த தபாற்பொதியை தபால்நிலையத்தில் இருந்து பெற்றுச்செல்கையில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப்போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனைசெய்வதற்காகவே இப்போதைப்பொருள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுவதாகவும். கடந்த பல மாதங்களாக இவ்வாறு தபால் மூலமாக வெளிநாட்டில் இருந்து மர்ஜுவான (உருகுவே கஞ்சா) வரவழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு போலாவலான பிரதேசத்தைசேர்ந்த சேர்ந்த ரசிக சுரங்க மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை, முன்னக்க்கரை பிரதேசங்களை சேர்ந்த நீல் சுரங்க,சந்தீப் எனும் சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்த்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றையதினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

– நீர்கொழும்பு செய்தியாளர் –