தனிமைப்படுத்தலுக்காக பலரை அழைத்துச் சென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம் – விடத்தல்பளையில் சம்பவம் !
கிளிநொச்சி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்காக லெபனானிலிருந்து இலங்கைக்கு வந்த சிலரை அழைத்து சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே, விபத்துக்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.