உஷ்... இது இரகசியம் !

தனது திருமணத்துக்கு மோடியை அழைத்த நாமல் -மோடி விசிட் சுவாரஷ்யங்கள் !

 

நேற்று இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்தாரல்லவா அப்போது நடந்த சில விடயங்கள்…

இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருந்தார்..

அது முறையாக பிரதமர் ரணிலுக்கு சொல்லப்படவில்லை. அதேசமயம் குறுகிய நேரம் மட்டும் இந்தியப் பிரதமர் இலங்கையில் இருப்பதால் அவரை வரவேற்க தீர்மானித்த ரணில் நேரே விமான நிலையம் சென்றார்.

பின்னர் சஜித்தை புறந்தள்ளி மோடியை வரவேற்ற ரணில் பின்னர் சஜித்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தம்முடன் காரில் ஒன்றாக பயணிக்குமாறு பிரதமர் மோடி ரணிலிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அங்கிருந்து மோடியுடன் ஒன்றாக காரில் ஏறி கொழும்பு வந்த ரணில் கொழும்பு வரும் வரை முக்கிய பேச்சுக்களை நடத்தியதாக தகவல்.

சஜித்துக்கு விதிக்கப்பட்ட தடை !

இந்தியப் பிரதமரின் வாகன தொடரணி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு வந்தபோது அவரின் வாகனத்தை உள்ளே விட்ட இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பின்னால் மற்றுமொரு வாகனத்தில் வந்த சஜித்தை உள்ளே விடவில்லை . அங்கு சந்திக்க வருவோர் பட்டியலில் சஜித்தின் பெயர் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.

என்ன கூறியும் சஜித்தை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காத காரணத்தினால் அவர் இந்திய இல்லத்தின் வெளியில் நிற்கவேண்டியேற்பட்டது. பின்னர் பிரதமர் ரணில் அங்கு செல்லும்போது சஜித் வெளியில் நிற்பதை கண்டு தன்னுடன் உள்ளே அழைத்துச் சென்றதாக தகவல் .

மோடியை திருமண நிகழ்வுக்கு அழைத்த நாமல் !

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழு மோடியை சந்தித்து பேசியதல்லவா? அரசியல் பேச்சுக்கள் முடிந்த பின்னர் நாமல் எம் பி பக்கம் திரும்பிய மோடி “ஹவ் ஆர் யூ நாமால்” என்றார்..

நலமாக இருப்பதாக ஆங்கிலத்தில் பதிலளித்த நாமல் எம் பி – தனது திருமணம் செப்ரெம்பரில் நடக்கவிருப்பதாகவும் – பிரதமர் மோடி அதில் விசேட விருந்தினராக கலந்துகொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

“ ஓ அப்படியா எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..” என்று ஆங்கிலத்தில் கூறிய மோடி – தனது செயலாளர் பக்கம் திரும்பி அந்த திருமண திகதியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டார்.

பதறிய அதிகாரிகள் !

நேற்று மோடி இலங்கை வந்த பின்னர் கட்டுநாயக்க பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.
விசேட விருந்தினர்கள் பயணிக்கும் பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டதால் உடனடியாக விரைந்த விமானப்படை மரத்தை அறுத்து சில மணி நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்தது.

இந்த பணி தாமதமானால் – முன்னேற்பாடாக கொழும்பில் இருந்து மோடியை ஹெலியில் விமான நிலையம் வரை அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.