விளையாட்டு

தந்தையானார் விராட் கோலி

நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருக்கும் விராட் கோலி, பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.