உலகம்

தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்ட வடகொரிய அதிகாரி பொதுவெளியில்

வடகொரியாவின் தலைவரால் தண்டனை வழங்கப்பட்டு தொழிலாளர் முகாமில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்ட அதிகாரி கிம் யொங் சோல், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அவர் முக்கிய பங்கினை வகித்தார்.

அத்துடன் அவர் வடகொரிய தலைவரின் வலது கை என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

அண்மையில் அவருக்கு தொழிலாளர் முகாமில் தங்கி மீள் கற்கையில் ஈடுபடும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜொங் உன்னுடன் தோன்றும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.