விளையாட்டு

தடையை எதிர்நோக்கியுள்ள கோமதி

 

தமிழகத்தின் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து நான்கு ஆண்டுகள் தடையை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய மெய்மல்லுனர் போட்டிகளில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அவர், சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

எனினும் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனையில் அவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியமை தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது சோதனை நடத்தப்படவுள்ளது.

இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், நான்கு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதோடு, அவரது பதக்கமும் பறிக்கப்படும்.