இலங்கை

தங்கத்தை தேடிக் களைத்த பொலிஸ் !

போர்க்களத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கப்புதையலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் தேடிய பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து ஒட்டுசுட்டான் -முத்துஐயன் கட்டு பகுதியில் கூட்டுறவு திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் இந்த தேடுதல் நடத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி பெக்கோ இயந்திரம் கொண்டு தோண்டி தேடுதல் நடத்தப்பட்டாலும் இறுதி வரை எதுவுமே தென்படவில்லையென கூறும் முல்லைத்தீவு பொலிஸார் இதனால் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறினர் .