உலகம்

ட்ரம்பிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

 

நான்கு காங்கிரஸ் பெண்களை இலக்காகக் கொண்ட தொடர் இனவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அடையாளப்பூர்வமாக கண்டிக்க அமெரிக்க பாராளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் ‘புதிய அமெரிக்கர்கள் மற்றும் மாற்று நிற மக்கள் மீதான அச்சத்தையும் வெறுப்பையும் நியாயப்படுத்திய இனவெறி கருத்துக்களை’ இந்த தீர்மானம் கண்டித்துள்ளது.

காங்கிரஸ் உறுப்பினர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னதற்காக அவர் மீது இனவெறி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி ‘என் உடலில் இனவெறி எலும்பு இல்லை!’ என்று ட்வீட் செய்துள்ளார்.

எவ்வாறாயினும் டரம்பின் இனவாத கருத்துகளை கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்று, சபையில் 240 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.