உலகம்

ட்ரம்பிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை தயாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற நீதிக் குழு அவர் மீதான முறைப்பாட்டை வெளியிட்டுள்ள நிலையில், இந்தவார இறுதியில் இதுத் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற அவை நீதிக்குழு வெளியிட்ட குற்றச்சாட்டின் முதல் பிரிவில் ட்ரம்ப் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.அடுத்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் செயற்பாட்டை தடுத்ததாக சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக உக்ரைனுக்கான உதவியை நிறுத்திவைத்ததாகவும் டொனால்ம் ட்ரம்ப் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.