உலகம்

ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த இராணுவ தலைமையகம்

பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப்பின் கோரிக்கையை அமெரிக்க இராணுவ தலைமையிடம் நிராகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. அமெரிக்க அதிபர் பதவி காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டொனால்டு டிரம்ப் அமெரிக்க இராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார்.

டிரம்பின் கோரிக்கையை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நிராகரித்துள்ளது.