உலகம்

டோரியன் சூறாவளிக்கு இதுவரை 43 பேர் பலி

பஹாமாஸ் தீவுகளில், அழிவுகளை ஏற்படுத்திய டோரியன் சூறாவளிக்கு இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சூறாவளி, பஹாமாஸ் தீவுகளில் இருந்து நகர்ந்து, அமெரிக்காவின் வட கரோலினாவை தாக்கியுள்ளது.

டோரியன் சூறாவளியின் தாக்கத்தால் கரோலினாவில் கடும் காற்றும் வெள்ளபெருக்கும் ஏற்பட்டுள்ளது.

டோரியன் குறித்த அச்சத்தால் அமெரிக்கவின் புளோரிடா, ஜோர்ஜியா, வட மற்றும் தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹாமாஸ் தீவின் வரலாற்றில் மிகக் கடுமையான சூறாவளி பதிவாகியுள்ள டோரியன் அங்கு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

டோரியன் ஏற்படுத்தி பெரும் பேரழிவில் இருந்து பஹாமாசை மீட்க சர்வதேச சமூகம் உதவி செய்யமேண்டுமென  அந்நாட்டு  பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.