விளையாட்டு

டோனிக்கு கிடைத்த ஆதரவு

 

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் மூலம் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் தனது அதிரடியை டோனி தொடங்கினார். மைதானத்தில் களம் இறங்கிய டோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

டோனியை ரசிகர்கள் பலரும் குரலெழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் டோனியின் மகளான ஸிவாவும் தனது தந்தையை ஊக்கப்படுத்தினார். கூட்டத்தோடு கூட்டமாக அப்பா… அப்பா….என்று ஹிந்தியில் கூறி தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். அவரின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளாது