உலகம்

டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் துரதிஸ்ட்டவசமானது – இந்தியா

அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இந்த மாதத்துடன் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்திருந்தார்.
இந்த தீர்மானம் துரதிஸ்டவசமானது என்று இந்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வழங்கப்படும் சலுகைக்கு நிகராக, இந்திய சந்தையில் அமெரிக்காவின் பொருட்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால், இந்த வரிசலுகை நீக்கப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தியா உள்நாட்டு நலனை கருத்திற்கொண்டே செயற்படும் என்று இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் இந்த தீர்மானத்துக்கு அமெரிக்காவின் பல முக்கியஸ்த்தர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அமெரிக்காவிற்கு சுமார் 300 மில்லியன் டொலர்கள் கிரயம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வரிச்சலுகை மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 2000 பொருட்கள் அமெரிக்காவிற்கு வரியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.