உலகம்

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் 5 சதவீத தீர்வை அறவிடப்படவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 10ம் திகதி முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரையில், இந்த வரி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் அவர் ஏற்கனவே தெற்கு எல்லையில் சட்டவிரோத குடியேறிகளின் பிரசன்னம் அதிகரித்துள்ளமையையிட்டு, தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.