உலகம்

டைம்ஸின்( Times) ‘உலகின் சிறந்த நபர்’ கிரேட்டா தன்பேர்க்

 

சுவீடன் நாட்டின் பிரபலமான காலநிலை ஆர்வலரான 16 வயது, கிரேட்டா தன்பேர்க் இந்த வருடத்தின் உலகின் சிறந்த நபராக டைம்ஸ் ( Times)இதழால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்குரிய உலகின் சிறந்த நபர்பகளை, டைம்ஸ் இதழ் தெரிவு செய்து வரும் நிலையில் முதல் தடவையாக இளம் வயது பெண் ஒருவரை அந்த இதழ் தெரிவு செய்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில், உலகத் தலைவர்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்த தன்பேர்க், இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

2018ஆம் ஆண்டு முதல் காலநிலை மாற்றம் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தன்பேர்க், 2019ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து உலகலாவிய ரீதியில் பலரும் அறிந்த இளம் வயது காலநிலை ஆர்வலராக அறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட கிரேட்டா தன்பபேர்க் அங்கு ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெரும் போராட்டங்களுக்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.