டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மீண்டும் முன்னெடுப்பு
கொரோனா தொற்று நிலைமை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பொது இடங்களை இலக்கு வைத்து வோல் பெக்கியா பக்டீரியா (Wolbachia bacteria) அடங்கிய நுளம்புகளைச் சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொழும்பு மாநகரம் மற்றும் நுகேகொட சுகாதார அத்தியட்சகர் அதிகார பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.