உலகம்

டெங்குவால் 100 பேர் பலி

இந்த ஆண்டு இதுவரை பங்களாதேஷ் முழுவதும் குறைந்தது 104 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின், சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரத்தின்படி, ஏப்ரல் மாதத்தில் இரண்டு, ஜூன் மாதத்தில் ஆறு, ஜூலை மாதம் 35, ஒகஸ்டில் 57 மற்றும் கடந்த மாதம் நான்கு என உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

166 உயிரிழப்புகளை பரிசீலித்த, அரசாங்கத்தின் தொற்றுநோயியல், நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  இதுவரை 104 டெங்கு பேர் நோயினால் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

செப்டெம்பர் மாதத்தில்  மாதத்தில், 16,856 டெங்கு நோயாளர்களும், ஒகஸ்டில் 52,636 டெங்கு நோயாளர்களும், இந்த மாதத்தில் இதுவரை 5,637 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு பங்களாதேஷில் 93,807 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததோடு, 26 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.