இலங்கை

டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைப்பு !

 

மகப்பேற்றுக்காக சிசேரியன் சத்திரசிகிச்சை செய்யும்போது கூடவே கருத்தடை நடவடிக்கையையும் செய்தார் என்று கூறி குருநாகல் டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்க சில பெண்கள் இன்று குருநாகல் வைத்தியசாலைக்கு வந்திருப்பதாக தெரியவருகிறது.

வாரியப்பொல மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் எழுத்துமூலம் முறைப்பாட்டை செய்துள்ள அதேசமயம் மேலும் ஆறு பேர் இப்படியான முறைப்பாட்டை செய்ய வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக இன்று காலை வைத்தியசாலைக்கு சென்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மகப்பேற்று சத்திரசிகிச்சையை மேற்படி டாக்டரே செய்தாரென்றும் அதன் பின்னர் கரு தங்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பெண்கள் கூறியுள்ளனர்.ஆனால் அவர்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை டாக்டர் ஷாபி வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்தார் என்று கூறியே பொலிஸ் அவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.