இலங்கை

” ஞானசார செய்தது கீழ்த்தரமான வேலை” – ஹிஸ்புல்லாஹ் சாட்டை !

 

விடுதலையான பின்னர் தியானத்தில் ஈடுபடுவதாக சொன்ன ஞானசார தேரர் பின்னர் அதற்கு முற்றிலும் மாறாக செயற்படுவது கீழ்த்தரமான வேலையென தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ .எம் .ஹிஸ்புல்லாஹ் .

‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவேண்டுமென கூறி நீங்களும் அசாத் சாலியும் வலியுறுத்தினீர்கள் .இப்போது அவரின் செயற்பாடு உங்களுக்கு விரோதமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?” என்று எமது செய்தியாளர் கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்ட அவர்மேலும் கூறியதாவது ,

ஞானசார தேரர் குற்றமிழைத்து சிறைத்தண்டனை பெற்றுவந்தவேளை அவர் விடுதலை செய்யப்பட்டால் முன்னர் போலல்லாமல் திருந்தி இருப்பார் என்று எம்மிடம் கூறப்பட்டதால் கண்ணியமான ரமழான் மாதத்தில் நாங்கள் அதனை வரவேற்றோம்.ஒருவர் சிறையில் இருந்து வெளியில் வந்து திருந்தி இருப்பேன் என்று கூறும்போது நாங்கள் அதனை மறுப்பது பண்பல்ல.

ஆனால் வெளியில் வந்த அவர் தியானம் செய்து அமைதியாக இருக்கப் போவதாக கூறினாலும் பின்னர் அதற்கு முரணாக செயற்பட ஆரம்பித்துள்ளார்.இது மிகவும் கேவலமானதும் கீழ்த்தரமானதுமான வேலை.அவர் இப்படி நடந்திருக்க கூடாது.

– என்றும் குறிப்பிட்டார் ஹிஸ்புல்லாஹ்