உலகம்

ஜோர்ஜிய பாராளுமன்றம் முன்பாக குழப்பநிலை – பலர் காயம்

 

ஜோர்ஜியாவின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முயன்றதை அடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய சட்டவாக்க உறுப்பினர் ஒருவர், பாராளுமன்றத்தில் சபாநாயகருடைய ஆசனத்திலிருந்து உரையாற்றியமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.