உலகம்

ஜேர்மன் துப்பாக்கிச் சூடு – அஞ்சலி செலுத்திய மக்கள்

ஜேர்மனியின் ஹனாவ் நகரில் இரண்டு பிரபலமான சொகுசு மதுபானசாலைகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனியின் ஹனாவ் நகரில் நேற்று முன்தினம் இரவு இரு மதுபானக் சாலைகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 9 பேர் பலியானதோடு. பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் முக்கிய சந்தேகநபர், அவரது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹனாவ் மற்றும் பெர்லினில் நேற்று மாலை இடம்பெற்ற அமைதி பிரார்த்தனைகளில், மெழுகுவர்த்திகள் மற்றும் வெள்ளை ரோஜாக்களை ஏந்தியவாறு மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுவொரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெயளியிட்டுள்ளனர்.

இதேவேளை, முக்கிய சந்தேகநபரான உயிரிழந்த, பீட்டர் பிராங்க், டொபியாஸ் ஆர, இணையத்தில் இனவெறி மனநிலையை வெளிக்காட்டும் வகையில் பதிவுகளை இட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.