உலகம்

ஜேர்மனியில் தேர்தல் வரும் வாய்ப்பு

ஜேர்மனியில் ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சியான சமுக ஜனநாயக கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து, அன்றியா நஹ்லாஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் அவரது கட்சி நல்ல பெறுபேற்றைப் பெற தவறியதால், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாளை திங்கட் கிழமையுடன் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் பதவி விலகியப்பின்னர் கூட்டணியில் இருந்து சமுக ஜனநாயக கட்சி வெளியேறும் பட்சத்தில், ஜேர்மனியில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.