Breaking News

ஜேர்மனியில் ஜெட் விமான விபத்து

 

ஜேர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் இரண்டு யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானங்கள் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்துவிட்டதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனிய நகரமான ஸ்வெரினிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய நகரமான மால்கோவ் மீது இரண்டு ஜேர்மன் விமானப்படை போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.
விமானத்தின் பாகங்கள் அருகிலுள்ள காட்டில் விழுந்து தீப்பிடித்ததாகத் தெரிகிறது.