விளையாட்டு

ஜேசன் ரோய் 2 போட்டிகளில் இல்லை

 

இங்கிலாந்தின் வீரர் ஜேசன் ரோய், உலகக்கிண்ண தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் இணைக்கப்படவுள்ளதாக அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது ஜேசன் ரோய் காயமடைந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர், அவரது காயம் பாரதூரமானது என்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.