இலங்கை

ஜெனீவாவில் அரசு செய்த கள்ள ஒப்பந்தம் – முப்படையினரைக் காட்டிக்கொடுப்பு ஜனாதிபதி !

.”வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களை விடுவிக்க சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நிறுவ வேண்டுமென ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதுஅரசியலமைப்பின்படி நாம் செயற்படுவோம்.யாரோ எங்கோ சொல்கிறார்கள் என்று நாம் அரசியலமைப்பினை மீறி செயற்படோம் .என்னுடன் பேசாமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணைக்கு சம்மதம் தெரிவித்தது யார்? வெளிநாட்டமைச்சுக்கு தெரியாமல் வெளிவிவகார செயலருக்கு தெரியாமல் வெளியுறவுக் கொள்கைகளை மீறி ஜனாதிபதியின் சம்மதமின்றி ஜெனீவாவில் அங்கிருக்கும் எமது பிரதிநிதி செய்த கைச்சாத்திடலை நான் நிராகரிக்கிறேன்.இது முப்படையினரை காட்டிக்கொடுக்கும் செயல்.அரசையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் செயல். எனக்கு தெரியாமல் அதில் ஒப்பமிட்டவர்களை நான் கண்டிக்கிறேன்”

களுத்துறை மீகஹதென்ன புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்தை திறந்துவைத்து ஜனாதிபதி பேச்சு .