உலகம்

ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டுகள்

விக்கிலீக்ஸ் இணை நிறுவுனர் ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்காவின் நீதித்திணைக்களம் புதிய 17 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இரகசியப்படுத்தப்பட்ட தகவல் மூலங்களின் பெயர்களை பெற்றுக் கொண்டமை மற்றும் சட்டவிரோதமாக அவற்றை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்குகின்றன.
ஏற்கனவே அவர் அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்தி, பெண்டகன் பாதுகாப்பு கட்டமைப்பின் விபரங்களைப் பெற்றுக் கொண்டதற்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிணை நிபந்தனை மீறல்குற்றச்சாட்டில் தற்போது அசான்ஜ் பிரித்தானியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.