சினிமா

ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்த “களத்தில் சந்திப்போம்” திரைப்படம் ஜனவரி 28ஆம் திகதி தைப்பூச தினத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர்குட் நிறுவனத்தின் 90ஆவது தயாரிப்பான இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படம் ஜீவா மற்றும் அருள்நிதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.