இலங்கை

ஜிஹாத் பயங்கரவாத ஒழிப்பிற்கு இந்தியா முழு ஆதரவு – மாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

பொது அச்சுறுத்தலான ஜிஹாத் பயங்கரவாத ஒழிப்பை இலங்கை கையாளும்போது இந்தியா அதற்கு முழு ஆதரவையும் வழங்குமென இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் மாநாயக்க தேரர்களை சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ள உயர்ஸ்தானிகர், இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா வழங்கிவரும் ஆதரவுக்கு மாநாயக்க தேரர்கள் பாராட்டு தெரிவித்ததாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்தி அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.