Breaking News

ஜிந்துப்பிட்டியில் 154 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளங்காணப்பட்டதனை அடுத்து ஜிந்துப்பிட்டி 123 ஆம் இலக்கத் தோட்டத்தைச் சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.