உலகம்

ஜப்பானிய பெண்ணை கொன்று தானும் தற்கொலை செய்த அமெ.கடற்படை மாலுமி


ஜப்பானில் அமெரிக்க கடற்படை மாலுமி ஒருவர் ஜப்பானிய பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஜப்பான் ஒக்கினோவா தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜப்பான் ஒக்கினோவா தீவுப்பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளால் அங்கு அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது. அதேசமயம் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க கடற்படை ஜப்பானிடம் தெரிவித்துள்ளது.