உலகம்

ஜப்பானிய இரசாயன தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் கூடம் ஒன்றில் இன்று சந்தேகநபர் ஒருவரால் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த கூடத்திற்குள் நுழைந்த 42 வயதான சந்தேகநபர் பெற்றோல் ஸ்ப்ரே செய்து தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் இடம்பெற்ற 3 மாடி கட்டிடம் தீ பரவிய நிலையில் தற்போது தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

30 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.