Breaking News

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு – ஜனாதிபதி உத்தரவு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் அவர்கள் கேட்கும் அடிப்படையில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்யுமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.