இலங்கை

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார் ஞானசார தேரர் !

 

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார் கலபொடஅத்தே ஞானசார தேரர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்ரி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வுக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.அப்போது ஞானசார தேரரை சந்தித்திருந்தார்.

நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார்.அதில் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.

சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.