இலங்கை

“ ஜனாதிபதி – பிரதமர் சொன்னால் பதவி விலகத் தயார் ” – அமைச்சரவையில் சொன்னார் ரிஷார்ட்

 

“ஜனாதிபதி அல்லது பிரதமர் சொன்னால் நான் பதவி விலகுகிறேன்.வேறு யார் கூறுவதையும் ஏற்று செயற்பட நான் தயாராக இல்லை”

இவ்வாறு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் விசனத்துடன் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன்.

தனது அரசியல் வாழ்க்கையை இல்லாமலாக்க எதிர்க்கட்சி முயல்வதாக இங்கு குறிப்பிட்ட ரிஷார்ட் , நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“ எந்த சந்தர்ப்பத்திலும் நான் இராணுவத்தளபதிக்கு அழுத்தத்தை வழங்கவில்லை.கைதான ஒருவரின் விபரத்தையே கேட்டேன். ஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் இப்போதே பதவி விலக நான் தயார்..” – என்றும் ரிஷார்ட் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிந்தது