இலங்கை

ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை சோபா உடன்பாடு பேச்சுக்களை நிறுத்தியது அமெரிக்கா !

 

 

அமெரிக்க தூதுவர் அலய்னா பி.ரெப்லிட்ஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, தமது நாட்டின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான காலஅவகாசம் இப்போது முடிந்து விட்டது என்றும், அமெரிக்கத் தூதுவர் ரெப்லிட்ஸ், மைத்ரியிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சோபா உடன்பாட்டில் தனது சம்மதமின்றி கையெழுத்திட முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.