Breaking News

ஜனாதிபதி தேர்தல் கூட்டணி அமைக்க முன் மூகாம்பிகையை வழிபட இந்தியா செல்லும் ரணில்

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு முன்னோடியாக அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதற்கான ஆசீர்வாதத்தை பெற இந்திய கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார் ரணில்.

வரும் 24 ஆம் திகதி செல்லவுள்ள அவருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளனர்.

ஏற்கனவே இந்தக் கோவிலுக்கு சென்றுள்ள பிரதமர் அங்கு வழிபட்டதன் மூலம் நல்ல பலன்களை பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் இப்போதும் அவர் செல்வதாக பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

( பிரதமர் ரணில் 2017 ஆம் ஆண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட படம் இணைக்கப்பட்டுள்ளது )