Breaking News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு

அமெரிக்க குடியுரிமை நீக்கத்தால் – ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) கூறினார்.

இன்று (22) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 17 முதல் தனது அமெரிக்க குடியுரிமை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறைக்கு இதனை அறிவித்து இலங்கை கடவுச் சீட்டையும் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ,சிலர் தனது குடியுரிமை குறித்து பொய்யை பரப்புவதன் மூலம் சிக்கல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ.ல.சு.க. தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் எம்.பி.க்கள் ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.