இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பேன் – கோட்டா அதிரடி பேட்டி !

 

இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு புலனாய்வுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

அரசு புலனாய்வுத்துறை கட்டமைப்பாக இல்லை என்பதையே இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன.தாக்குதல் தொடர்பில் ஆளுக்காள் குற்றம்சாட்டி வருகின்றனர் தவிர இது எப்படி நடந்தது,எப்படி அவர்கள் நாட்டுக்குள் எப்படி வந்தனர் என்பதை பற்றியோ அல்லது தாக்குதல்கள் குறித்தோ எந்த தகவல்களும் எதனையும் யாரும் சொல்வதாக இல்லை.இப்படியான குழுக்களுக்குள் ஊடுருவி அந்த வலையமைப்பையே இல்லாமல் செய்திருக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு குறித்து இவர்கள் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.நூற்றுக்கு நூறு வீதம் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.இந்த அடிப்படைவாதத்தை ஒழிப்பேன்.

– என்றும் குறிப்பிட்டுள்ளார் கோட்டாபய