இலங்கை

ஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்……

 

ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் புறப்பட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (21) பிற்பகல் டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க உள்ளிட்ட அந்நாட்டின் தூதுவராலய அதிகாரிகளும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி, இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், உலகத் தலைவர்கள் பலரும் பங்குபற்றும் ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழா நாளை பிற்பகல் டோக்கியோவில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்ரி , ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்திக்கவுள்ளார்.