இலங்கை

ஜனாதிபதி -கூட்டமைப்பு சந்திப்பு உறுதியான முடிவின்றி முடிந்தது – இடைநடுவில் வெளியேறிய மைத்ரி !

 

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான இன்று நடைபெற்ற கலந்துரையாடல் எந்தவித தீர்மானமும் இன்றி நிறைவு பெற்றதாக தெரிகிறது. கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளாத அதே சமயம் ஜனாதிபதியும் இடைநடுவில் வெளியேறிவிட்டதாக அறியமுடிந்தது.

இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி, மகாவலி அபிவிருத்தி அமைச்சு, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் மற்றும் வடக்கு ஆளுனர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

11 மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தபோதும், 11.20 அளவிலேயே கூட்டம் இடம்பெற்றது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், முக்கிய விவகாரத்தை பேசும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிருப்தி ஜனாதிபதியிடம் தெரிந்ததாக கூட்டமைப்பு எம் பி ஒருவர் குறிப்பிட்டார்.

இதன்பின், வடக்கு ஆளுனர் தலைமையில் கூட்டம் நடந்தபோது பல விடயங்கள் அதில் பேசப்பட்டன.