இலங்கை

ஜனாதிபதியின் புதுவருட நிகழ்வில் டக்ளஸ் – சுமந்திரன்- சுரேன் ராகவன் !

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று நடத்திய புதுவருட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் . ஏ . சுமந்திரன் – ஈ பி டி பி செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தா – வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் உட்பட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படும் அதிரடி அரசியல் முடிவுகள் குறித்து இன்று ஏதேனும் தகவல்கள் வெளிவருமா என்று இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவித பிரதிபலிப்பையும் ஜனாதிபதி காட்டவில்லையென அறியமுடிந்தது.