இலங்கை

ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முடிகிறது? உருவானது புதிய சர்ச்சை !

 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து பேசப்பட்டு வரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தினை கோர ஜனாதிபதி மைத்ரிபால தரப்பு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்தில் இருந்தே 19 ஆவது திருத்தம் அமுலுக்கு வந்ததாக கணிக்கப்படும் என்பதால் ஜனாதிபதி மைத்ரியின் பதவிக்காலம் 2020 மே 26 ஆம் திகதியே முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி தரப்பு கருதுகிறது.

இதனைக் குறிப்பிட்டே மீண்டும் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தினை கேட்பதற்கு மைத்ரி தரப்பு தயாராகி வருகிறது.

ஏற்கனவே தனது பதவிக்காலம் குறித்து அபிப்பிராயத்தை ஜனாதிபதி மைத்ரி உயர்நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்.அப்போது ஐந்து வருடம் தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது

இதற்கிடையில் இவ்வருடம் ஒக்டொபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது