Breaking News

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

 

மரண தண்டனையை மீண்டும் அமுலாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வெலிக்கடை சிறைக்கு முன்னால் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு இன்னும் 2 வாரங்களுள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது